அம்மா இரு மா வந்துட்டேன் தினைக்கும் காலைல இப்படி தான் அவசர கதியில சாப்டிட்டு ஓடறதே என்னக்கு பழக்கமாயுடுச்சு. என் பேரு திவ்யா 32 வயசு ஆகுது-ஏன் இதுவரைக்கும் கல்யாணம் அகலை எனக்கு தெரியல...!!!.அப்பா இல்லை அம்மா மட்டும் தான்-அவங்களுக்கும் என்னை கல்யாணம் பண்ணி குடுக்கணும்நு முன்னாடி தேடனங்க அப்றம் தேடி தேடி ஓஞ்சி போய்ட்டாங்க - நடைய நடந்து காலும் வாயும் சோர்ந்து போனது தான் மிச்சம் -அவங்களும் வயசான காலத்துல என்ன செய்வாங்க பாவம் .சேரி நாமளே தேடிக்கலாம் நு நெனைச்சு இதுவரைக்கும் நான் 3 பெற காதலிச்சி இருக்கறேன்
ஆனா என்னவோ ஒன்னு மிஸ் அகரமதிரியே எனக்கு ஒரு பீலிங் - 3 பெற கடந்து வரர்துகுல எனக்கு பேரு வேற மாறிடிச்சு. சில சமயம் ஏன் நான் இப்படி இருக்கறேன் இன்னிமே யாரு வந்தாலும் ஒதுக்கலாம் நு தோணும் அனா என்னக்கு ரொம்ப ஈகோ ஜாஸ்தி மனசுல பெரிய இவ நு நெனப்பு -அப்போ அப்போ இந்த மனோபாவம் எனக்கு கை குடுகலனாலும் -நேரிய நேரம் நான் மத்த பொண்ணுங்களை விட ரொம்ப மேல நு ஒரு பீலிங் தரும் - அது எனக்கு பிடிக்கும்.இந்த மாதிரி ஒரு சுஷ்நிலை ல தான் போன வாரம் என் குட ஸ்கூல்ல படிச்ச ரேணு வ பாத்தேன் கைல ஒன்னு நடக்க ஒன்னு நு எவளோ அழகா இருந்தா பாக்க. நான் மருன்படியும் என்ன பத்தி சிந்திக்க ஆரம்பிச்சேன்...நான் ஏன் இப்படி..என்னகுனு ஒருத்தன் ..இன்னைக்கு வந்துருவான் நாளைக்கு வந்த்ருவன் நு என்கி என்கி ஹ்ம்ம்...32 வயசு அன்னது தான் மிச்சம் .